சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:-
பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தூர்வாறும் பணிகள் 95 சதவீதம் நிறைவுபெற்று உள்ளது.
2015ஆம் ஆண்டு பெய்த மழை வேறு; தற்போது பெய்துவரும் மழை வேறு; மக்கள் அச்சப்படத் தேவையில்லை. வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4500 வீடுகள் அகற்றம். படகுகள், சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆட்சி கலைய வேண்டும் என்பதே ஸ்டாலின் விருப்பம்.
என கூறினார்.